செய்வினை நீக்குவதற்கு பூஜை செய்வதாக கூறி நகையை கொள்ளையடித்த போலி சாமியார்..!

திருவள்ளூர், பூண்டி அருகே செய்வினையை நீக்க பூஜை செய்வதாக கூறி நான்கு சவரன் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மோவூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் வீட்டருகே வந்த இளைஞர் ஒருவர், மூட்டுவலிக்கு வைத்தியம் பார்ப்பதாக கூறிய நிலையில், பார்த்தசாரதி அந்த நபரை வீட்டிற்குள் அழைத்துச்சென்றுள்ளார்.
வீட்டிற்கு செய்வினை வைக்கப்பட்டிருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக பூஜை செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.
பூஜை செய்வதற்காக பார்த்தசாரதியின் மகள் மோகனா தான் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகையை கழற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கோவிலில் பூஜை செய்வதாக கூறி சென்ற போலி சாமியார், திரும்பி வராத நிலையில், காவல்நிலையத்தில் பார்த்தசாரதி புகார் அளித்துள்ளார்.
Comments