RECENT NEWS

கூடுதல் வரதட்சணைப் புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? - நீதிபதி சரமாரி கேள்வி

BIG STORIES

பாலிவுட் நடிகர்கள் குறியா?.. பிரபல நடிகர்கள் வீட்டில்... அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி!!!

May 23, 2025 01:39 PM

251

பாலிவுட் நடிகர்கள் குறியா?.. பிரபல நடிகர்கள் வீட்டில்... அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி!!!

நடிகர் சல்மான் கான் வீட்டில் அத்துமீறி நுழைய, முயற்சி செய்த பெண்.. பாலிவுட் பிரபல நடிகர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி.. என்ன நடக்கிறது பாலிவுட் திரையுலகில்... விரிவாக பார்க்கலாம்...

பாலிவுட் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டிருப்பவர் சல்மான் கான். 59 வயதாகும் சல்மான், தனது தனித்துவமான நடிப்புத் திறனால் அதிகளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இவர் தற்போது மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் என்ற 8 மாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார்.

சல்மான் கானிற்கு எவ்வளவு புகழ் வெளிச்சம் உள்ளதோ, அதே அளவிற்கு இவர் மீது பல சர்ச்சைகளும் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடிகர் சல்மான்கானை கொலை செய்ய சில முயற்சிகளும் நடந்தது. இதில் ஈடுபட்டது குஜராத் சிறையில் உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சல்மான் கானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பததால், அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் சல்மான் கான் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் மற்றும் அருகே இருப்பவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பெண் ஒருவர் சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கானின் கேலக்ஸி கட்டிடத்தில் வசிக்கும், மற்றொருவரின் காரில் மறைந்து உள்ளே செல்ல முயன்றிருக்கிறார். ஆனால் அதனை கண்ட போலீஸார் உடனே அவரை தடுத்து கைதுசெய்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இதேபோன்று ஜிதேந்திர குமார் என்ற நபர், சல்மான் கான் வீட்டிற்கு அருகில் சுற்றி வந்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அந்த நபரை சம்பவ இடத்தில் இருந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் போலீஸாரும், ஜிதேந்திர குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஜிதேந்திர குமார், தனது மொபைல் போனை தரையில் போட்டு உடைத்தார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையில் அவரது சொந்த ஊர் சத்தீஷ்கர் என்றும், சல்மான் கானை பார்க்கும் நோக்கில் அவரது வீட்டிற்குள் நுழைய முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நபரிடம் மேற்கொண்டு விசாரிப்பதற்காக உள்ளூர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு பெண் சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக சல்மான் பல மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக லாரன்ஸ் பிஷ்னோய் சார்பில் சல்மான்னுக்கு எதிராக மிரட்டல் கடிதம் மும்பை போலீஸ்சாருக்கு கிடைத்தது. அதில் மன்னிப்பு கேள் அல்லது உயிரோடு இருக்க 5 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என கூறிப்பிடப்பட்டிருந்தது..

இந்த நிலையில் கடந்த இரு தினங்களில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், மும்பை போலீஸ் சல்மான் கான் வீட்டில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம், பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் புகுந்து மர்ம நபர் அவரை கத்தியால் தாக்கினார். இதில் சைஃப் அலிகானுக்கு உடம்பில் 6 இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சைஃப் அலி கான், பின் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் மீண்டும் அதேபோன்று மற்றொரு பாலிவுட் பிரபல நடிகர் வீட்டில் இருவர் அத்துமிறலில் ஈடுப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிப்பட்டவர்கள் ரசிகர்கள் தானா? அல்லது அவர்கள் வேறொரு திட்டத்திற்காக வீட்டிற்குள் செல்ல நினைத்தார்களா? அவர்களுக்கு பின்னணியில் இருப்பது யார்? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போலீஸ் ஏட்டு மனைவியை விரட்டிச்சென்று நகை பறிப்பு.. வெளியான பதைபதைக்கும் காட்சி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies