மழை பாதிப்பு - வாட்ஸ் அப் எண் அறிமுகம்..!

0 2060

மிழகத்தில் சில மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதி கனமழை பொழிவு ஏற்பட உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு குறித்து, 1077 மற்றும் 1070 என்ற Toll Free எண் வாயிலாக கட்டுப்பாட்டு மையங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், 9445869848 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும் மழை பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments