கோவிலில் இருந்து ஐம்பொன் சிலைகளைத் திருடிய இருவர் கைது..!

0 1309

சென்னை புளியந்தோப்பில் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலைகளைத் திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

புளியந்தோப்பு பிரிட்டன்ஸ் சாலையிலுள்ள வலம்புரி விநாயகர் ஆலயத்தின் பூட்டை உடைத்து முருகர், வள்ளி, தெய்வானை, விநாயகர் என 4 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆட்டோ ஒன்றில் சிலைகள் திருடிச் சென்றது தெரியவந்தது.

ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரை கைது செய்த போலீசார், அவருடன் சேர்ந்து சிலை திருட்டில் ஈடுபட்ட அருண்குமார் என்பவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து திருடப்பட்ட சிலைகளும் மீட்கப்பட்டன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments