கொரோனா தடுப்பூசி மிக குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்

0 2335
கொரோனா தடுப்பூசி மிக குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

கொரோனா தடுப்பூசி மிக குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 9 விழுக்காட்டினரே முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள கேரளத்தில் 22 புள்ளி 4 விழுக்காட்டினரும், குஜராத்தில் 20 புள்ளி 5 விழுக்காட்டினரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருந்தும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு முதலில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மார்ச்சில் 28 லட்சம் பேரும், மே மாதத்தில் 30 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments