92 நாட்களில் 12 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உலகிலேயே முன்னணி நாடாக விளங்குகிறது இந்தியா

0 3016

கடந்த 92 நாட்களில் 12 கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உலகிலேயே முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா எடுத்துக் கொண்ட இலக்கை அடைய அமெரிக்காவுக்கு 97 நாட்களும், சீனாவுக்கு 108 நாட்களும் ஆனதாகத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 12 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 590 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments