உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக மயங்கி விழுந்த யானை : தாய் யானைக்கு அரணாக நின்று பாதுகாத்த குட்டி யானை

0 1183
உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக மயங்கி விழுந்த யானை : தாய் யானைக்கு அரணாக நின்று பாதுகாத்த குட்டி யானை

தாய்லாந்தில் காயம்பட்ட தாய் யானையைக் காப்பாற்ற முயன்றவர்களை குட்டி யானை ஒன்று விரட்டியடித்த வீடியோ வெளியாகி உள்ளது.

சந்தாபுரி மாகாணத்தில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த யானை ஒன்று உடலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக மயங்கி விழுந்தது.

அப்போது அந்த யானையின் 3 வயது குட்டி அதனருகில் யாரையும் அண்டவிடாமல் பாதுகாப்பு அரணாக நின்றது.

வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் தாய் யானையை மீட்க முயன்றபோதும், குட்டி யானை அவர்களை அண்ட விடாமல் விரட்டியடித்தது.

இறுதியில் தாய் யானைக்கும் குட்டி யானைக்கும் மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர் தகுந்த சிகிச்சைக்குப் பின் இரு யானைகளையும் வனத்திற்குள் விடுவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments