ஜெர்மனியில் உள்ள தமிழாய்வு நிறுவனத்துக்கு ரூ. 1.24 கோடி நிதி வழங்கத் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1075

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழாய்வு நிறுவனத்துக்கு ஒரு கோடியே 24 லட்ச ரூபாயைத் தமிழக அரசு அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், 1963ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனத்தில் தமிழில் இளங்கலைப் படிப்பு உள்ளதையும், நூலகத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனத்துக்குத் தமிழக அரசின் சார்பில் ஒரு கோடியே 24 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று 2019ஆம் ஆண்டில் கூறப்பட்டு அது வழங்கப்படாததையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட ஏதுவாக இந்த நிதி சென்றடைய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments