60 வயதிற்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி..அதற்கான வழிமுறைகள் என்ன?

0 4639
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் நாளை துவங்கும் நிலையில், அதற்கான நடைமுறைகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவை சேர்ந்தவர்கள் வயது சான்றுக்காக ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வர வேண்டும்.  எந்த தடுப்பூசி மையத்துக்கும் சென்று  தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இரண்டாவது டோஸ் குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும்.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும்,  தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கொடுத்தும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.தமிழ்நாட்டில் 761 தனியார் மருத்துவமனைகளிலும் 529 அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments