ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் இந்தி கடவுளா ? திருமாவளவன் சீற்றம்
ஒரு அப்பனுக்கு பிறந்தவர்களில் முருகன் தமிழ் கடவுள், விநாயகர் ஹிந்தி கடவுளாக எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டுவிட்டால் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒரு அப்பனுக்கும், அம்மாவுக்கும் பிறந்த முருகன் தமிழ் கடவுள், என்றால் விநாயகர் ஹிந்தி கடவுளாக எப்படி இருக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்
முருகனை தமிழ் கடவுள் என்று தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டு விட்டால், நாம், தமிழர்களாக தலை நிமிர்ந்து விடுவோமா ? என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்
குலதெய்வ வழிபாட்டிலும் சனாதனம் புகுந்து பெரு தெய்வ வழிபாடு வந்து விட்டதாக சுட்டிக்காட்டிய திருமாவளவன், இந்துக்கள் என்ற ஒற்றை சொல்லில் எல்லோரையும் மயக்கி சனாதன சக்திகள் கிடத்தி இருப்பதாக தெரிவித்தார்
Comments