தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 2,133 பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ்..!

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, கணிசமாக குறைந்து, ஒரே நாளில் 2 ஆயிரத்து 133 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக ஆயிரத்து 663 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில், 93 வயது மூதாட்டி ஒருவர், கொரோனாவுக்கு பலியானார். சென்னையில், புதிதாக 486 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் 148 பேர், செங்கல்பட்டில் 116 பேர், கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். பெரம்பலூர், மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
அரியலூர், நீலகிரி,ராமநாதபுரம், தென்காசி , தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments