இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கிய 100க்கும் அதிகமான திமிங்கலங்கள்

இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கிய 100க்கும் அதிகமான திமிங்கலங்கள்
இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
தலைநகர் கொழும்பு அருகே உள்ள பாணந்துறை கடற்கரையில் நேற்று மாலை திடீரென 100க்கும் அதிகமான பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.
10 முதல் 15 அடி நீளம் கொண்ட பைலட் திமிங்கலங்களை மீட்டு மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயற்சித்து வருவதாக இலங்கை கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் தர்ஷனி லகந்தபுரா தெரிவித்துள்ளார்.
அதிக சமூகப் பிணைப்புக் கொண்ட இந்த வகை திமிங்கலங்கள் கடல் நீரோட்டம், வயது முதிர்வு காரணமாக கரை ஒதுங்கியிருக்கலாம் என கடல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments