ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

0 1337
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 7 வருடத்தில் இருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை ஒட்டி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இந்த சுற்றறிக்கையை அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு அனுப்பி உள்ளது.

கல்லூரியின் அறிவிப்பு பலகை வாயிலாக B.Ed மற்றும் M.Ed ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments