முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1-ம் தேதிக்குள் தொடங்கும் என ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு

0 1495
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1-ம் தேதிக்குள் தொடங்கும் என ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1-ந் தேதிக்குள் தொடங்கும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் நேரடி 2-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கையை அக்டோபர் இறுதிக்குள் முடித்து நவம்பர் முதல் வாரத்தில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. முன்னதாக அறிவித்திருந்தது.

ஆனால், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை வந்ததை அடுத்து, நவம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளலாம் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1-ந் தேதிக்குள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments