தெலுங்கானாவில் ஏடிஎம் எந்திரத்தை கேஸ் கட்டரால் வெட்டி 15 லட்சம் ரூபாய் கொள்ளை

0 1553
தெலுங்கானாவில் ஏடிஎம் எந்திரத்தை கேஸ் கட்டரால் வெட்டி 15 லட்சம் ரூபாய் கொள்ளை

தெலுங்கானாவில் ஏ.டி.எம். எந்திரத்தினை கேஸ் கட்டர் கொண்டு வெட்டி அதிலிருந்த 15லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஹைதராபாத் சந்தா நகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையம் செயல்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏடிஎம் எந்திரம் பழுது காரணமாக ஏடிஎம் மையத்தின் ஷட்டரை கீழே இழுத்துவிட்டு காவலாளி சென்றுள்ளார்.

இந்நிலையில் மூடியிருந்த மையத்தினுள் நுழைந்த மர்மநபர்கள், பெரிய சிலிண்டரை வைத்து ஏடிஎம் எந்திரத்தை கேஸ் கட்டரால் வெட்டி பணம் திருடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவலாளி கொடுத்த தகவலில் நிகழ்விடம் வந்த வங்கி அதிகாரிகள் 15லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்து போலீசில் புகார் அளித்தனர்.

அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments