இந்திய ராணுவத்தின் பதிலடியால் சீன அதிபர் ஜின்பிங்கின் லடாக் ஊடுருவல் திட்டம் பிசுபிசுத்துப் போனது - அமெரிக்க நியூஸ் வீக் இதழ்

0 11896

இந்திய ராணுவத்தின் மூர்க்கமான, எதிர்பாராத பதிலடியால், சீன அதிபர் ஜின்பிங்கின் கிழக்கு லடாக் ஊடுருவல் திட்டம் பிசுபிசுத்துப் போனதாக, முன்னணி அமெரிக்க இதழான நியூஸ் வீக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய எல்லையில் சீன ராணுவம் தோல்வியைத் தழுவியதால், ஜின்பிங் களையெடுப்பில் இறங்குவார் என்றும், ஆனால் ஊடுருவல் திட்டத்தை வகுத்தவரே ஜின்பிங்தான் என நியூஸ்வீக் கூறியுள்ளது.

சீன அரசுத் தலைமை, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை என ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் குவித்து வைத்துள்ள ஜின்பிங், இந்திய ராணுவ நிலைகளுக்கு எதிராக மேலும் ஒரு ஊடுருவல் முயற்சிக்கு திட்டமிடக்கூடும் என நியூஸ்வீக் எச்சரித்துள்ளது.

கால்வன் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி மோதலின்போது இந்திய வீரர்களின் மூர்க்கமான பதிலடியால் சீன தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாகவும், அந்த எண்ணிக்கை 60 வரை கூட இருக்கும் என்றும் நியூஸ் வீக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments