திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

0 832

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. 

ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ.அன்பரசன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா., பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனுக்காகவும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவுக்காகவும் வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தனர்.

மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் பிற்பகலில் நேரடியாக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த இருவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்படும் நிலையில், அவர்கள் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் 9ஆம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழுவில் வெளியாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments