சென்னை ராயப்பேட்டையில், ATM-மில் பணத்தை டெபாசிட் செய்ய வந்தவரிடம் கொள்ளை முயற்சி

0 3345

சென்னை ராயப்பேட்டையில் வங்கி ஏடிஎம்மில் பணம் போட வந்த நபரிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

ராயபேட்டையை சேர்ந்த சாகுல் அமீது என்பவர் கடந்த 8ம் தேதி லாயிட்ஸ் சாலையிலுள்ள வங்கி ஏடிஎம் மையத்திலுள்ள டெபாசிட் இயந்திரம் மூலம் பணம் போடுவதற்காக வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் 15,47,500 ரூபாய் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றனர்.

ரோந்து பணியில் இருந்த போலீசாரும், பொதுமக்களும் விரட்டியதால் பணப்பையை போட்டுவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொட்டிவாக்கம் மற்றும் பாலவக்கத்தைச் சேர்ந்த நால்வரை கைது செய்தனர்.

அவர்களுள் 3 பேர் கொலை வழக்கு குற்றவாளிகளாவர். மேலும் சாகுல் அமீது கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால், அதனை போலீசார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் சையது என்பவரது பணத்தை சாகுல் அமீது கொண்டு வந்த நிலையில், அங்கிருந்து கொள்ளையர்களுக்கு ரகசிய தகவல் வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments