அயோத்தியா ஸ்ரீராமர் கோவில் பூமி பூஜையில் 250 பேர் கலந்து கொள்வார்கள் என தகவல்

0 1158
ஆக.5ல் நடக்கும் பூமி பூஜையில் மோடி கலந்து கொள்வதாக தகவல்

அயோத்தியாவில் வரும் 5 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் பூமி பூஜையில் 250 பேர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்றைய தினம் காலை 11 மணிக்கு வரும் பிரதமர் மோடி பிற்பகல் 1.10 மணி வரை அங்கு இருப்பார் என கூறப்படுகிறது. 5 ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்க உள்ள பூமி பூஜை தொடர்பான சடங்குகளில் அயோத்தியாவின் முக்கிய துறவிகள், ஸ்ரீராமர் கோயில் இயக்கம் தொட்ரபான மூத்த தலைவர்கள, ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகளின் மூத்த நிர்வாகிகள், சில மூத்த மத்திய அமைச்சர்கள், உ.பி.மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி மற்றும் காசியை சேர்ந்த ஆன்மிக பெரியோர் பூமி பூஜையை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments