சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு

0 10089

 

சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்து ஒரு சவரன் 37 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக சற்றே குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று மீண்டும் சற்றே அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று 4 ஆயிரத்து 622 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இன்று 4 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 626 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் நேற்று 36 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 32 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் வெள்ளி விலையில் சற்றே குறைந்துள்ளது. பார் வெள்ளி ஒரு கிலோ நேற்றைய விலையிலிருந்து 300 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments