சென்னையில் கொரோனாவில் இருந்து இதுவரை 34,828 பேர் குணம்

0 780

சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 34 ஆயிரத்து 828 பேர் குணமாகி இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 58,327ஆக அதிகரித்துள்ளதாகவும், குணமானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 828ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர 888 பேர் பலியான நிலையில், 22 ஆயிரத்து 610 பேர் மருத்துவ சிகிச்சை பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 3166 பேர் சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரில் 59 புள்ளி 46 சதவீதம் பேர் ஆண்கள், 40 புள்ளி 54 சதவீதம் பேர் பெண்கள் எனத் தெரிவித்துள்ள மாநகராட்சி, 30 முதல் 39 வயதுக்குட்பட்டோரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments