ககன்யான் கொரோனாவால் பாதிக்கப்படாது - மத்திய அமைச்சர்

0 586

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டமான ககன்யான் கொரோனாவால் பாதிக்கப்படாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி கொரோனாவால் தடைப்பட்டாலும், தற்போது மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், திட்டமிட்டபடி 2022-ல் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்துக்கு முன்பு ககன்யான் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரோ பணிகளில் தனியாரை ஊக்குவிக்கும் வகையில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். சந்திரயான் 3 திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments