தெலங்கானா மாநில உள்துறை அமைச்சருக்கு கொரோனா

0 431

தெலங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்மாநில உள்துறை அமைச்சர் முஹம்மது மஹ்மூத் அலி கடந்த வாரம் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். இதில் மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்ற பின் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், கொரோனா சோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து மஹ்மூத் அலி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments