தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 2798

தமிழகத்தில், அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, தருமபுரி, நாகை, தஞ்சாவூர், நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வட கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் ஜூன் 29 தேதியன்று மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments