5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீன வர்த்தக பற்றாக்குறை குறைந்தது

0 9650
2013-14 ல் 34 % ஆக இருந்த பற்றாக்குறை மோடி அரசால் குறைந்துள்ளது

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறை, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த நிதி ஆண்டில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டு   சுமார் 4 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக ((53. 6 பில்லியன் டாலர்)) இருந்த வர்த்தக பற்றாக்குறை, கடந்த நிதி ஆண்டில்  7 சதவிகித சரிவுடன் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ((48.7 பில்லியன் டாலர்)) ரூபாயாக குறைந்துள்ளது.

2013-14 காலகட்டத்தில் 34 சதவிகிதமாக இருந்த சீன வர்த்தக பற்றாக்குறை, , மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது.

சீனா வர்த்தக பற்றாக்குறை குறையும் அதே நேரத்தில், அமெரிக்கா, இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி என்ற இடத்தை பிடித்துள்ளது. இந்திய சீன வர்த்தகம்  சுமார் ஆறேகால் லட்சம் கோடி ரூபாயாக (( 82 பில்லியன்)) இருக்கும் நேரத்தில் அமெரிக்க வர்த்தகம்  சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயாக ((88.8 பில்லியன்)) வளர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments