'தேங்யூ டெட்மேன்'- 90's கிட்ஸ் உருக்கம்!

0 3340

புகழ்பெற்ற ரெஸ்லிமேனியான வீரர் அன்டர்டேக்கர் ஓய்வு அறிவித்துள்ளார். இனிமேல் ஒரு போதும் களமிறங்மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரெஸ்லிங் உலகில் 'டெட்மேன் ' என்று அழைக்கப்படும் அன்டர்டேக்கரின் இயற்பெயர் மார்க் வில்லியம் காலேவே. போட்டி களத்துக்கு சவப்பெட்டியில்தான் வருவார். மேடைக்கு வருவதற்கு முன் கும்மிருட்டு பரவ விடுவதுடன், மரணத்துக்கு எழுப்பப்படும் மணியோசையையும் எழுப்புவார்கள். இதன் மூலம் அண்டர்டேக்கர் வருகையை உணர்ந்து ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். குதூகலம் கொள்வார்கள். அதனால்தான் இவருகு டெட்மேன் என்ற பட்டப் பெயர் உண்டு. களத்தில் ஆக்ரோஷமாக மோதுவதும் எதிரிகளை நைய புடைப்பதும்தான் அண்டர்டேக்கரின் அடையாளம். இதுவே, கோடிக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்களை இவருக்கு ரசிகர்களாக மாற்றியது.

டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த இவரின் வயது 55 . கடந்த 1984 - ம் ஆண்டு தொழில்முறை ரெஸ்லிங்மேனியாவில் புகுந்தார் . 1990- ம் ஆண்டு உலக ரெஸ்லிங்மேனியாவின் சர்வைவல் சீரிஸ் தொடர் மூலம் பிரபலமடைந்தார். ஜான் சேனா, தி ராக், படிஸ்டா வரிசையில் மற்றொரு முக்கியமான வீரராக உருவெடுத்த அண்டர்டேக்கர் 1990- ம் ஆண்டு முதல் 2020- ம் ஆண்டு வரை என்று 30 ஆண்டுகளாக WWE போட்டிகளில் பங்கேற்று வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் வயது முதிர்வு காரணமக மிகவும் குறைவான WWE போட்டிகளிலேயே அண்டர்டேக்கர் பங்கேற்றார். இதனால், அண்டர்டேக்கர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு அறிவிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த நாளும் நேற்று வந்தது. The Last Ride என்ற நேற்றைய போட்டியுடன் தன் ஓய்வை அறிவித்துள்ளார் அண்டர்டேக்கர்.

WWE-ல் அண்டர்டேக்கருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 1990- ம் ஆண்டு கிட்ஸ்கள்தான் அண்டர்டேக்கரின் முக்கிய ரசிகர்கள். தற்போது, அண்டர்டேக்கர் ஓய்வு அறிவித்திருப்பதால், அவரின் ரசிகர்கள் சமூகவலைத் தளங்களில் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஓய்வு குறித்து அண்டர்டேக்கர் கூறுகையில்,'' இனிமேல் வெற்றி வெற வேண்டிய எதுவும் இல்லை. வாழ்க்கையின் இந்த காலக்கட்டத்திலும் விளையாட எனக்கு ஆர்வம் இல்லை. கைப்பற்ற வேண்டியதும் இல்லை, சாதிக்க வேண்டியதும் இல்லை. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய தருணம் இது'' என்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments