சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா... ஒரே நாளில் 34 பேருக்குக் கொரோனா தொற்று!

0 3920

சீனாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது அலையாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. இன்று ஒரே நாளில் 34 பேருக்குப் புதிதாக நோய்த்  தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், நோய்க் கிருமி பரவும் இடங்களை முடக்கத் தொடங்கியிருக்கிறது சீனா.  

சீனாவின் வுகாண் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் 83,352 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 4634 பேர் தோற்று காரணமாக இறந்து போயினர். இந்த நிலையில் சீன அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு சீனாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளி நாடுகளிலிருந்து சீனாவுக்குத் திரும்பி வருவோர் மூலம் மீண்டும் கொரோனா வைரஸ் பரவாத தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

பல்வேறு நாடுகளிலிருந்து சீனாவுக்குத் திரும்பி வந்த 57 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு எந்தவித அறிகுறியும் தோன்றவில்லை.

நோய்த் தொற்று பரவல் குறித்து அதிகாரிகள், "சீனாவில் தற்போது புதிதாக 34 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22 பேர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 7 பேருக்கு எந்தவித அறிகுறியும் ஏற்படவில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.  

நோய்த் தொற்று பரவலால் பெய்ஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி காய்கறி சந்தை மூடப்பட்டது. சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவவிடக்கூடாது என்பதால் பெய்ஜிங்கில் அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அலையாகப் பரவத்தொடங்கியிருக்கும் கொரோனா வைரஸ் சீன மக்கள் மத்தியில்  மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments