பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 12ஆவது நாளாக உயர்வு

0 592

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 12ஆவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் அந்நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இதனால் கடந்த 11 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து வந்தது. இந்நிலையில் 12ஆவது நாளாக இன்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று 80 ரூபாய் 86 காசாக இருந்த 1 லிட்டர் பெட்ரோல் விலை 46 காசுகள் உயர்ந்து, 81 ரூபாய் 32 காசாக அதிகரித்துள்ளது. இதேபோல் நேற்று  73 ரூபாய் 69 காசாக இருந்த 1 லிட்டர் டீசல் விலை இன்று 54 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 23 காசாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments