முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்று ரூ.8,000 கோடி திரட்ட யெஸ் வங்கி திட்டம்

0 1221

முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்று 8 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் திரட்ட யெஸ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வாராக்கடன் மற்றும் நிதி நெருக்கடியில் தள்ளாடிய யெஸ் வங்கியை மீட்க அண்மையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட 8 வங்கிகள் சார்பில் யெஸ் வங்கியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதால் ஓரளவு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில் நிதி ஆதாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்து 8 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments