சென்னையில் ஒரே நாளில் 40 டாக்டர்களுக்கு கொரோனா

0 9242

சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் என மொத்தம் 40 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையின் 3 மருத்துவர்களுக்கும், ஸ்டான்லி மருத்துவமனையின் 12 மருத்துவர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

அயனாவரம் இ. எஸ்.ஐ மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையின் தலா 2 மருத்துவர்கள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை யின் ஒரு மருத்துவர், இராயபுரம் ஆர். எஸ். ஆர். எம் மருத்துவமனையின் 2 மருத்துவர்கள் மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரியின் 18 பயிற்சி மருத் துவர்களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

இதுதவிர, மருத்துவ பணியாளர்கள் மற்றும் எம்.எம்.சி நர்சிங் கல்லூரியின்12 செவிலியர்கள் உள் பட மொத்தம் 63 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments