தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்

0 25475

சுகாதாரத் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் புதிய சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மறுஉத்தரவு வரும் வரை, சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்புடன் கூடுதல் பொறுப்பாக வருவாய் நிர்வாகத்துறை முதன்மைச் செயலராகவும், வருவாய் நிர்வாக ஆணையராகவும்  ராதாகிருஷ்ணன் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரேனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, சென்னைக்கான கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக ராதா கிருஷ்ணன் மீண்டும் பொறுப்பு ஏற்றுள்ளார். சென்னை - தலைமைச்செயலகத்தில் உள்ள தமது அறையில் ராதாகிருஷ்ணன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, உடனடியாக பணிகளை துவக்கினார். இதற்கிடையே, மறுஉத்தரவு வரும் வரை, சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்புடன் கூடுதல் பொறுப்பாக வருவாய் நிர்வாகத்துறை முதன்மைச் செயலராகவும், வருவாய் நிர்வாக ஆணையராகவும் ராதாகிருஷ்ணன் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments