பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு

0 1243

பாஜக தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இருவரும் கடந்த நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள சாகேத் பகுதியிலிருந்தும் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சோதனையின் போது இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. அதில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அறிகுறிகள் இருந்ததாகவும், அவரின் தாய்க்கு அறிகுறிகள் இல்லாமல் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், இருவரும் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments