ஒடிசாவில் விமானப் பயிற்சியின்போது விபத்து - 2 பேர் பலி

0 2255

ஒடிசாவில் விமானப் பயிற்சியின்போது விபத்து ஏற்பட்டு, பயிற்சியளிக்கும் விமானியும், தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானியும் உயிரிழந்தனர்.

ஒடிசாவின் தென்கனல் (Dhenkanal) மாவட்டத்தில் அரசு விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த, விமானப் பயிற்சியாளர் கேப்டன் சஞ்சீப் குமார் ஜா, பயிற்சி விமானியும் தமிழகத்தை சேர்ந்தவருமான அனீஸ் பாத்திமா என்பவருக்கு பிர்சாலா பேஸ் விமான ஓடுதளத்தில் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.

பயிற்சிக்காக விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளாகி விழுந்தது. இதில் விமானப் பயிற்சியாளர் சஞ்சீப் ஜாவும், பயிற்சி விமானி அனீஸ் பாத்திமாவும் உயிரிழந்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தென்கனல் எஸ்.பி. அனுபமா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments