கொரோனா தொடர்பான பாதிப்பு, உயிரிழப்பு தகவல்களை திடீரென நிறுத்தியது பிரேசில்

0 1349

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் வெளியிடுவதை பிரேசில் அரசு திடீரென நிறுத்தியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் 2வது இடத்திலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 3 வது இடத்திலும் உள்ளது.

நேற்றைய நிலவரப்படி பிரேசிலில் 6 லட்சத்து 78 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டும், 36 ஆயிரத்து 78 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தேதி வாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த விபரங்கள் நீக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்த நாட்டில் உண்மை கரோனா பலி எண்ணிக்கையை அதிபர் பொல்சொனாரோ மறைக்க முயல்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments