தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின

0 3532

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று பேருந்துகள் இயங்கத் தொடங்கின...

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்படாமல் இருந்தன.இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று காலை பேருந்துகள் இயங்கத் தொடங்கின. பயணிகள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்கப்பட்டனர். பயணிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாலையில் புறப்பட்ட சிலபேருந்துகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் பயணம் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments