எகிறும் உயிரிழப்பால்.... அதிரும் உலக நாடுகள்

0 1434
எகிறும் உயிரிழப்பால்.... அதிரும் உலக நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து 26 லட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆனால் பிரேசிலில் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் ஒன்றேகால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே பிரேசிலில் கொரோனா பாதிப்பு, 4 லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டி விட்டது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் ஆயிரத்து 200 பேர் வரை உயிரிழந்ததால் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை காரணமாக நான்காம் இடத்தில் இருந்த பிரேசில், ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு தொடர்ந்து 4வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ரஷியாவில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 572 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு, கணிச மாக உயர்ந்துள்ளது. இதுதவிர, துருக்கி, ஈரான், மெக்சிகோ, பாகிஸ்தான், கத்தார், வங்கதேசம் , குவைத் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு, நிமிடத்திற்கு நிமிடம் உயர்ந்து வருகிறது. இதுவரை, சுமார் 3 லட்சத்து 66 ஆயிரம் பேர், கொரோனாவுக்கு இரை ஆகி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments