சென்னை-சேலம் இடையே இன்று முதல் விமான போக்குவரத்து சேவை

0 914

சுமார் 2 மாதத்திற்கு பிறகு சென்னை - சேலம் இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது.

காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ட்ரூ ஜெட் விமானம் 56 பயணிகளுடன் 8.25 மணிக்கு சேலம் சென்றடைந்தது. அதே விமானம் சேலத்தில் இருந்து 48 பயணிகளுடன் 8.50 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு சென்னை வந்தடைந்தது.

பயணிகளின் வசதிக்காக விமானம் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களது உடமைகள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments