ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் பின்னடைவு

0 1109
ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் பின்னடைவு

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து குரங்குகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தவறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டின் தடுப்பு மருந்தான சாடோக்ஸ் 1 என்கோவ் 19 ((ChAdOx1 nCoV-19,)) குரங்குகளுக்கு கொடுத்துப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதில் கிடைத்த சாதகமான அம்சங்களை அடுத்து அது மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட குரங்குகளின் முக்கில் கொரோனா வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சில குரங்குகளிடம் வேகமான மூச்சிறைக்கும் தன்மை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட மற்றும் கொடுக்கப்படாத குரங்குகளுக்கு வைரஸ் பாதிப்பில் ஒரேவிதமான நிலையே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மருந்து வெற்றியடைந்தால் செப்டம்பருக்குப் பின் உற்பத்தியைத் தொடங்கப்போவதாகவும் ஆண்டு இறுதிக்குள் லட்சக்கணக்கான டோஸ்களை தயாரிக்கப்போவதாகவும் இந்தியாவின் சீரம் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போதைய தகவல்களால் ஆய்வில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments