கொரோனா சோதனை தொடர்பாக இரு குழுவினர் மோதிக் கொண்டதில் 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்

0 973
மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் கொரோனா சோதனை நடத்துவது தொடர்பாக நிகழ்ந்த மோதலில் இருவர் உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் கொரோனா சோதனை நடத்துவது தொடர்பாக நிகழ்ந்த மோதலில் இருவர் உயிரிழந்தனர்.

மூவர் காயமடைந்தனர். பிந்த் மாவட்டம் பிரேம் நகரில் டெல்லியில் இருந்து ஊர் திரும்பிய ஒருவருக்கு கொரோனா சோதனை நடத்த வேண்டும் என ஒரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்லியில் இருந்து வந்தவர் தான் ஏற்கெனவே சோதனை செய்துகொண்டதாகவும், மீண்டும் சோதனை செய்ய வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதை ஏற்க மறுத்த மற்றொரு குழுவினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிகழ்ந்த மோதலில் ஒரு மூதாட்டி உட்பட இருவர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments