செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா

0 1515

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு, பல்லாவரம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை 397 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 413 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments