இந்தியர்களை அழைத்து வர மாலத்தீவை சென்றடைந்தது இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஸ்வா

0 1082

மாலத்தீவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அனுப்பப்பட்ட 2 இந்திய கடற்படை கப்பல்களில் ஒரு கப்பல் அந்நாட்டை சென்றடைந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப முடியாதோரை கப்பல்கள், விமானங்கள் மூலம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒருபடியாக மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு தலா 2 கப்பல்கள் வீதம், 4 கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மாலத்தீவுக்கு அனுப்பப்பட்ட 2 கப்பல்களில் ஐஎன்எஸ் ஜலஸ்வா எனும் கடற்படை கப்பல், மாலே துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. அக்கப்பலில் நாளை  முதல்கட்டமாக ஆயிரம் பேர் அழைத்து வரப்பட இருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments