மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா

0 3064
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா

சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் மேலும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாளொன்றுக்கு 13.5 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படும் நிலையில், மாதவரம் பால் பண்ணையில் இருந்து மட்டும் 4.20 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது.

ஏற்கனவே அங்கு ஒப்பந்த ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்காலிக ஊழியர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மேலும் 6 ஊழியர்களுக்கும் இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாதவரம் பால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் தீவிரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாதவரம் பால் பண்ணையில் கொரோனா வேகமாக பரவி வருவதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆவின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments