கொரோனா நோய் பரவலைத் தடுப்பது காலத்தின் கட்டாயம் - முதலமைச்சர் வேண்டுகோள்

0 7676

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

கொரோனா நோய் பரவலைத் தடுப்பது காலத்தின் கட்டாயம்

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு ரூ.3,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்

10,158 படுக்கை வசதிகள் தயார். கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்

தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க முடிவெடுத்து அறிவிப்பு

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000, 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணைய் வழங்கப்படும்

பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 வழங்குவதுடன் கூடுதலாக ரூ.1000 சிறப்பு நிதியாக வழங்கப்படும்

அம்மா உணவகங்களில் சூடான - சுகாதாரமான உணவு, தொடர்ந்து கிடைக்கும்

கொரோனா நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்

மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்

மருத்துவ உதவி தேவை எனில் 104 அல்லது 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

கைகளை சுத்தமாக கழுவி, கூட்டம் சேருவதை தவிருங்கள்

இருமல், தும்மல் வரும்போது, கைகுட்டைகளால் வாயை மூடிக்கொள்ளுங்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments