கொரோனாவை எதிர்த்துப் போராட இந்தியாவுடன் இணையத் தயார் - சீனா

0 35721

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்புத் தொடர்பான காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட மாநாட்டில், இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுங்கத் துறைகளைச் சேர்ந்த 2 ஆயிரம் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

அப்போது, சீன வல்லுநர்கள் தங்கள் தொற்றுநோய் தடுப்பு அனுபவத்தை தெற்காசிய நாடுகளின் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற தாங்கள் தயாராக இருப்பதாக சீனா கூறியது. அப்போது இந்தியத் தரப்பில் முகக்கவசம், கையுறை போன்றவை அதிகளவில் தேவைப்படுவதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments