கொரோனா அச்சுறுத்தலைச் சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்

0 1968

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைச் சமாளிக்க அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என சவூதி அரேபிய மன்னர் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

ரியாத்தில் இருந்தபடி தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், உலக வரலாற்றிலேயே நெருக்கடியான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கொரோனா பரவலைத் தடுக்க அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சவூதி அரேபியாவில் கொரோனா வைரசால் 274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கத் தடை, மெக்காவுக்குப் புனிதப் பயணம் வரத் தடை, மசூதிகள் மூடல், பள்ளிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மூடல் என மிகக் கடுமையான நடவடிக்கைகளை சவூதி அரேபியா எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments