ATM-ல் பணம் எடுத்துத் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த கும்பல்

0 671

சென்னை திருவல்லிக்கேணியில், ஏ.டி.எம்மில் பணம் எடுத்துத் தருவதாக கூறி, நபர் ஒருவரிடமிருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், கடந்த 10ஆம் தேதி, அப்பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்கச்சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர், பணம் எடுத்துத்தர உதவுவதாக கூறி, ராஜேந்திரனிடமிருந்த கனரா வங்கி கார்டையும் ரகசிய எண்ணையும் வாங்கியுள்ளனர்.

பின்னர் ஏடிஎம் செயல்படவில்லை என கூறி, தாங்கள் ஏற்கெனவே கைவசம் வைத்திருந்த வேறொரு கார்டை ராஜேந்திரனிடம் கொடுத்து ஏமாற்றிவிட்டுச் சென்றுள்ளனர். இதையறியாத ராஜேந்திரன், வீட்டிற்கு சென்ற நிலையில், அவரது வங்கிக்கணக்கிலிருந்து 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments