குமுளியில் சுற்றுலாப் பயணிகளுக்கான ஹெலிகாப்டர் சேவை

0 1018

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள குமுளியில் சுற்றுலாப் பயணிகளுக்கான ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

குமுளியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் ஒட்டகத்தலமேடு பகுதி உள்ளது. இங்கிருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி, பெரியாறு அணை நீர்த்தேக்கப்பகுதி, மங்கலதேவி கண்ணகி கோயில் மற்றும் தமிழகப் பகுதிகளை பார்த்து ரசிக்கலாம். இதனால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஒட்டகத்தலமேட்டிற்கும் செல்கின்றனர்.

இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல, தனியார் நிறுவனம் ஒன்று, சிறிய ரக ஹெலிகாப்டர் போக்குவரத்து வசதியை தொடங்க உள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் பிரச்னை முடிவுற்றதும், ஹெலிகாப்டர் சேவை தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments