துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் வீசப்பட்ட பொறியாளர்

0 879

தேனி மாவட்டம் கம்பம் அருகே பொறியாளர் ஒருவர் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து வீசப்பட்டது தொடர்பாக அவரது தாய் மற்றும் சகோதரனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கம்பம் அருகே தொட்டன்மன் துறையில் முல்லைப்பெரியாறு தடுப்பணை அருகே உள்ள புதரில் இருந்து ஆண் ஒருவரின் தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வந்து அந்த உடலை வீசிச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்து வீசிச் சென்ற இருவரும் கம்பத்தைச்சேர்ந்த செல்வி அவரது மகன் விஜயபாரத் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரைப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் வீசிச் சென்றது செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் உடல் என்கிற திடுக்கிடும் தகவல் வெளியானது.

image

மேலும் செல்வி அளித்த தகவலின் பேரில் விவசாய கிணறு ஒன்றில் இருந்து தலையை மீட்டனர். மற்றொரு விவசாய கிணற்றில் விக்னேஷ்வரனின் கை, கால்களை 2 ஆவது நாளாக தேடி வருகிறார்கள்.

விசாரணையில், கோவையில் பொறியாளராக பணி புரிந்த விக்னேஷ்வரனுக்கு திருமணம் ஆகாத நிலையில், கடந்த வாரம் அவரது தம்பி விஜயபாரத்துக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

தம்பி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிலையில் விக்னேஷ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் பணிக்கு செல்லாமல், மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் தாயே தனது இளைய மகனுடன் சேர்ந்து மூத்த மகன் விக்னேஷ்வரனை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments