அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்து வைக்க கோரிக்கை

0 420

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

7 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாக, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில், எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்திருப்பதை அமைச்சர் தரப்பு சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்குமாறு, அமைச்சர் தரப்புக்கும், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments