தினுசு தினுசா கடத்தப்பட்ட 45 லட்ச ரூபாய்..!

0 618

நிலக்கடலை, பிஸ்கட் பாக்கெட் மற்றும் பொறித்த இறைச்சி ஆகியவற்றுள் மறைத்து கொண்டு வரப்பட்ட 45 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

துபாய் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் புறப்படுவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்த முரத் அலி என்பவன், சந்தேகத்துக்கிடமான வகையில் தென்பட்டதால் அங்கு பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவனது உடைமைகளை சோதனையிட்டனர்.

அதில் நிலக்கடலை, பொறித்த கறித்துண்டுகள், பிஸ்கெட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை எடுத்துச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து முரத் அலியை கைது செய்த போலீசார், 508 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு 45 லட்ச ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments